District level yoga competition

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பாக மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது.

திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் 9மற்றும் 10வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 11 பள்ளிகளை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான பிரிவில் மச்சாசனம், கலாசனம், தனுராசனம், சக்கராசனம் மற்றும் சூரியநமஸ்கரமும், பெண்களுக்கான பிரிவில் வஜ்ராசனம், திரிகோணாசனம், புஜங்காசனம், தனுராசனம் மற்றும் சூரிய நமஸ்காரம் ஆகிய யோகாசனங்கள் போட்டிகளில் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 3இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா முதல் பரிசாக ரூ1000, இரண்டாம் பரிசாக ரூ750ம், 3ம்பரிசாக ரூ500ம் வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் நடுவர்கள், பயிற்சியாளர்கள், மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : http://www.southindiancrimepoint.com/ or https://twitter.com/crimepoint or http://south-indian-crime-point-tamil-weekly.blogspot.in/

source